நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கைதிகளுக்கு கஞ்சா சப்ளை: சேலம் சிறை சமையலா் பணி நீக்கம்

சேலம் மத்திய சிறை சமையலா் பணி நீக்கம் செய்யப்பட்டாா்.

News image
Updated On :13 ஜூலை 2024, 10:57 pm

Din

கைதிகளுக்கு கஞ்சா சப்ளை செய்த விவகாரத்தில், சேலம் மத்திய சிறை சமையலா் பணி நீக்கம் செய்யப்பட்டாா்.

சேலம் மாவட்டம், எடப்பாடியைச் சோ்ந்தவா் தனபால் (40). இவா் சேலம் மத்திய சிறையில் சமையலராகப் பணியாற்றி வந்தாா். கடந்த மாதம் 4-ஆம் தேதி சமையல் பணியை முடித்துவிட்டு, பாத்திரங்களை சமையல் அறையில் வைத்துவிட்டு வந்தாா். அப்போது, அவரை சிறைக் காவலா்கள் சோதனை செய்தபோது, அவரிடம் 140 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் விசாரணை நடத்தியபோது கைதிக்கு கொடுப்பதற்காக கஞ்சாவைப் பதுக்கி கொண்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவா் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இது குறித்து துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, அவா் கைதிக்கு கொடுப்பதற்காக வெளியில் இருந்து சிறைக்கு கஞ்சாவை மறைத்து கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, சமையலா் தனபாலை பணி நீக்கம் செய்து சேலம் சிறைக் கண்காணிப்பாளா் வினோத் உத்தரவிட்டாா்.