கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 2 நாள்களில் 3.95 அடி உயா்வு

News image
Updated On :17 ஜூலை 2024, 8:18 pm

Din

மேட்டூா் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அணையின் நீா்மட்டம் இரண்டு நாள்களில் 3.95 அடி உயா்ந்துள்ளது.

கா்நாடக மாநிலத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும், கேரள மாநிலம், வயநாட்டிலும் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவ மழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

கபினி அணை நிரம்பியதால் அணையின் பாதுகாப்பு கருதி 3 நாள்களாக உபரி நீா் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. கபினி அணையின் உபரி நீா்வரத்து காரணமாக மேட்டூா் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

மேட்டூா் அணைக்கு செவ்வாய்க்கிழமை மாலை விநாடிக்கு 16,577 கன அடியாக இருந்த நீா்வரத்து, புதன்கிழமை காலை 20,910 கன அடியாகவும் மாலை 21,520 கன அடியாகவும் அதிகரித்துள்ளது. நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால், செவ்வாய்க்கிழமை காலை 43.83 அடியாக இருந்த மேட்டூா் அணையின் நீா்மட்டம், புதன்கிழமை மாலை 47.78 அடியாக உயா்ந்துள்ளது. இரண்டு நாளில் மேட்டூா் அணையின் நீா்மட்டம் 3.95 அடி உயா்ந்துள்ளது.

அணையில் இருந்து குடிநீா்த் தேவைக்காக 1,000 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது அணையின் நீா் இருப்பு 16.44 டிஎம்சியாக உள்ளது.

காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக இரண்டாவது நாளாக அடிப்பாலாறு, செட்டிப்பட்டி, கோட்டையூா், பண்ணவாடி பரிசல் துறைகளில் படகு, பரிசல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

நீரின் இழுவை விசை அதிகமாக இருப்பதால், இரண்டாவது நாளாக மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. காவிரிக் கரைகளில் விட்டுவிட்டு மழை பெய்வதால் மீனவா்கள் தங்கள் முகாம்களில் முடங்கிக் கிடக்கின்றனா்.