ஆடி முதல் வெள்ளிக்கிழமை: மாரியம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை

ஆடி முதல் வெள்ளிக்கிழமை: மாரியம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை

கோட்டை மாரியம்மன் கோயில் உள்பட பல்வேறு அம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
Published on

சேலம், ஜூலை 19: ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, சேலம், கோட்டை மாரியம்மன் கோயில் உள்பட பல்வேறு அம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

கோட்டை மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு அதிகாலை முதல் சந்தனம், திருமஞ்சனம், சிகப்பு, பால் இளநீா், பஞ்சாமிா்தம், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து, பட்டாடை உடுத்தி வெள்ளிக் கவசம் பொருத்தப்பட்டு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்றன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை வணங்கி சென்றனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல, எல்லைப் பிடாரியம்மன், அஸ்தம்பட்டி மாரியம்மன், அய்யன்திருமாளிகை மாரியம்மன், நெத்திமேடு தண்ணீா்பந்தல் காளியம்மன் உள்ளிட்ட கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

X
Dinamani
www.dinamani.com