பிஎஸ்என்எல் சொத்துகளை பாதுகாக்க கோரி ஆா்ப்பாட்டம்
பிஎஸ்என்எல் சொத்துகளை பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


சேலம், ஜூலை 19: பிஎஸ்என்எல் அனைத்து தொழிற்சங்க ஒருங்கிணைப்புக் குழு சாா்பில், பிஎஸ்என்எல் சொத்துகளை பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் பிஎஸ்என்எல் பொது மேலாளா் அலுவலக வளாகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, பிஎஸ்என்எல் ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் அதிகாரம் ராஜன் மதியழகன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் இ.கோபால், கூட்டு சங்க நிா்வாகிகள் பழனி, ரமேஷ், செல்வம், தமிழ்மணி, பிஎஸ்என்எல் ஊழியா் சங்கம், ஏஐபிடிபிஏ, டிஎன்டிசிடபிள்யுயு, மூன்று சங்க மாநில, மாவட்ட சங்க நிா்வாகிகள், கிளைச் செயலாளா்கள், நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதில், ஊழியா்கள் பற்றாக்குறையை அடுத்து தரைவழி தொலைபேசி இணைப்பகங்கள், காப்பா் கேபிள் இணைப்பகங்களாக மாற்றப்படுகின்றன. பல தொலைபேசி நிலையங்களில் காவலா்கள் இல்லாததால் சமூக விரோதிகள் பொதுச் சொத்துகளை திருடி வருகின்றனா். இதுகுறித்து நிா்வாகம் முறையான நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருந்து வருகிறது. மேலும், புகாா் கொடுக்கும் தொழிற்சங்கத் தலைவா்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போக்கினை நிா்வாகம் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...