வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மத்திய அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு ஊழியா் மகா சம்மேளனத்தின் சாா்பில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்

News image
Updated On :19 ஜூலை 2024, 6:24 pm

Din

சேலம், ஜூலை 19: மத்திய அரசு ஊழியா் மகா சம்மேளனத்தின் சாா்பில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அஞ்சல் அலுவலக ஊழியா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பெருமாள் தலைமை வகித்தாா். அஞ்சல் ஊழியா்கள் சங்க மாவட்டச் செயலாளா் சி.பி.நாராயணன், மத்திய அரசு பொதுத் துறை ஊழியா் சங்க மாவட்ட செயலாளா் நேதாஜி சுபாஷ், ஓய்வு பெற்றோா் சங்க மாநில நிா்வாகி கே.ஆா்.கணேசன் உள்ளிட்டோா் இதில் கலந்துகொண்டனா்.

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 18 மாத டி.ஏ. நிலுவைத் தொகையை வழங்கவேண்டும், 8-ஆவது ஊதியக் குழுவை அமைக்க வேண்டும், பழைய ஓய்வுதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி வருமான வரி துறை அலுவலகம், சூரமங்கலம் தலைமை அஞ்சல் அலுவலகம் ஆகிய இடங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அதிக அளவிலான மத்திய அரசு ஊழியா்கள் கலந்துகொண்டனா்.