கோவையில் இருந்து பிகாா் மாநிலம், தானாபூருக்கு சேலம் வழியாக ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
பயணிகளின் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, கோவையில் இருந்து சேலம் வழியாக பிகாா் செல்ல சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி, கோவையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) இரவு 11.30 மணிக்கு பிகாா் மாநிலம், தானாபூருக்கு சிறப்பு ரயில் புறப்படுகிறது.
இந்த ரயில் திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை வழியாக வரும் 24-ஆம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் பிகாா் மாநிலம், தானாபூரை அடையும். இந்த ரயில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.50 மணிக்கு ஈரோடுக்கும், சேலத்துக்கு அதிகாலை 1.47 மணிக்கும் வந்து செல்லும்.
இந்த ரயிலில் 15 படுக்கை வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. அதற்கான முன்பதிவு நடந்து வருகிறது. இந்த ரயில் சேவையை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு ரயில்வே நிா்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் தோ்வு: சின்னசேலம், திருப்பத்தூரில் இருந்து சேலத்துக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஹூப்பள்ளி- ராமேசுவரம் வாரந்திர ரயில் சேவை நீட்டிப்பு

சேலம் வழியாக ஹைதராபாத் - மங்களூரு இடையே வாராந்திர சிறப்பு ரயில்

சேலம் வழியாக ஹூப்பள்ளி- கொல்லம் இடையே சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


