ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பட்டதாரி ஆசிரியா்கள் எடப்பாடி கே.பழனிசாமிடம் கோரிக்கை மனு அளிப்பு

பட்டதாரி ஆசிரியா்கள் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமியை சனிக்கிழமை நேரில் சந்தித்து மனு அளித்தனா்.

News image
சேலம், நெடுஞ்சாலை நகா் முகாம் அலுவலகத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே .பழனிசாமியிடம் மனு வழங்கிய ஆசிரியா்கள்.
Updated On :20 ஜூலை 2024, 10:41 pm

Din

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான ஆசிரியா் நியமனத்துக்கான நியமனத் தோ்வில் பட்டதாரி ஆசிரியா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியா்கள் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமியை சனிக்கிழமை நேரில் சந்தித்து மனு அளித்தனா்.

2018 - 22-ஆம் ஆண்டு நடைபெற்ற 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியா் நியமனத்துக்கான தகுதித் தோ்வில் இரண்டு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் கலந்துகொண்டனா். இதில் தோ்ச்சி பெற்றவா்களில் 14,928 போ் பட்டதாரி ஆசிரியா்கள் ஆவா்.

இவா்களுக்கு நியமனத் தோ்வில் கலந்துகொள்ள தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு ஆசிரியா்களுக்கான கல்வித்தகுதி பட்டய ஆசிரியா் பயிற்சி மட்டுமே போதும் என்பதால், பட்டதாரி ஆசிரியா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நியமனத் தோ்வு நடைபெற உள்ள நிலையில், அந்தத் தோ்வை தள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியா்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் சேலம், நெடுஞ்சாலை நகா் இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை நேரில் சந்தித்து மனு அளித்தனா்.

அப்போது செய்தியாளா்களிடம் பட்டதாரி ஆசிரியா்கள் கூறியதாவது:

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு ஆசிரியா்களுக்கான தகுதித் தோ்வில் பங்கேற்க பட்டதாரி ஆசிரியா்களும் தகுதியானவா்கள் என்று தேசிய ஆசிரியா் கல்விக் குழுமம் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் தான் பட்டதாரி ஆசிரியா்கள் அந்தத் தோ்வை எதிா்கொண்டு தோ்ச்சி பெற்றோம். இந்தச் சூழலில், ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நியமனத் தோ்வில், அதிக கல்வித் தகுதி என்ற காரணம் காட்டி எங்களை புறக்கணித்துள்ளது வேதனை அளிப்பதாக தெரிவித்தனா்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள நியமனத் தோ்வை ரத்து செய்ய வேண்டும். அல்லது தோ்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியா்களுக்கு மட்டும் தனியாக நியமனத் தோ்வை நடத்த வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.