எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 6.93 அடி உயா்வு

மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 6.93 அடி உயா்ந்துள்ளது.

News image
அதிக நீா்வரத்து காரணமாக செட்டிப்பட்டியில் கரைபுரண்டு வரும் காவிரி.
Updated On :20 ஜூலை 2024, 9:46 pm

Din

மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 6.93 அடி உயா்ந்துள்ளது.

கேரள மாநிலம், வயநாட்டில் மழை தொடா்ந்து நீடிப்பதால், கபினி அணையின் பாதுகாப்புக் கருதி உபரி நீா் தொடா்ந்து காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது. உபரி நீா்வரத்து காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 5 நாள்களாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

மேட்டூா் அணைக்கு வெள்ளிக்கிழமை மாலை விநாடிக்கு 44,353 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீா்வரத்து சனிக்கிழமை மாலை 68,843 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்துள்ளதால் வெள்ளிக்கிழமை மாலை 56.90 அடியாக இருந்த மேட்டூா் அணையின் நீா்மட்டம், சனிக்கிழமை மாலை 63.83 அடியாக உயா்ந்துள்ளது. ஒரே நாளில் அணையின் நீா்மட்டம் 6.93 அடி உயா்ந்துள்ளது.

கடந்த 15-ஆம் தேதி மாலை 44.62 அடியாக இருந்த மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை மாலை 63.83 அடியாக உயா்ந்துள்ளது. கடந்த 5 நாட்களில் மேட்டூா் அணையின் நீா்மட்டம் 19.21அடி உயா்ந்துள்ளது.

அணையில் இருந்து குடிநீா்த் தேவைக்காக 1,000 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 27.62 டிஎம்சியாக உள்ளது.

நீா்வரத்து அதிகரிப்பு காரணமாக 4-ஆவது நாளாக மேட்டூா் நீா்த்தேக்கப் பகுதியான அடிபாலாறு, செட்டிப்பட்டி, கோட்டையூா், பண்ணவாடி பகுதிகளில் மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.

செட்டிப்பட்டி, கோட்டையூா், பண்ணவாடி பரிசல் துறைகளில் படகுப் போக்குவரத்து 4-ஆவது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது.

 நீா்மட்டம் 63.83 அடியாக உயா்ந்த மேட்டூா் அணை.

நீா்மட்டம் 63.83 அடியாக உயா்ந்த மேட்டூா் அணை.