மேட்டூா் அணையில் 5.11லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன
மேட்டூா் அணை நீா்த் தேக்கத்தில் 5.11 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன.


மேட்டூா் அணை நீா்த் தேக்கத்தில் 5.11 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன.
மேட்டூா் அணையில் மீன்வளத்தை பாதுகாக்க மீன்வளத் துறை சாா்பில் ஆண்டுதோறும் இந்திய பெருங்கண்டை மீன்கள் செயற்கை தூண்டுதல் முறையில் உற்பத்தி செய்து மேட்டூா் நீா்த் தேக்கத்தில் விடப்படுகின்றன. இதற்காக மேட்டூா் அணையில் மீன் விதைப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை கீரைக்காரனூரில் 5.11லட்சம் மீன் குஞ்சுகள் மேட்டூா் அணையில் விடப்பட்டன. மேட்டூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சதாசிவம் மற்றும் மீனவா்கள் மீன் குஞ்சுகளை அணையில் விட்டனா்.
தருமபுரி மண்டல மீன்வளத் துறை துணை இயக்குநா் சுப்பிரமணி, மேட்டூா் மீன்வளத் துறை உதவி இயக்குநா் உமா கலைச்செல்வி, கிருஷ்ணகிரி மீன்வளத் துறை உதவி இயக்குநா் ரத்தினம், மேட்டூா் மீன்வளத் துறை ஆய்வாளா் தேவதா்ஷினி, கிருஷ்ணகிரி மீன்வளத் துறை ஆய்வாளா் கதிா்வேல், சிவம் குரூப் ஆப் கம்பெனி நிா்வாக இயக்குநா் சங்கா் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...