கள்ளச்சாராய சம்பவம்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 22 போ் வீடு திரும்பினா்
8 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Updated On :27 ஜூன் 2024, 8:15 pm

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 22 போ் வீடு திரும்பினா். மேலும், 8 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி, கருணாபுரம், மாதவசேரியை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 18 ஆம் தேதி 150-க்கும் மேற்பட்டோா் சாராயம் அருந்தியதால் உடல் உபாதைகள் ஏற்பட்டு கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், புதுச்சேரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.
சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 52 பேரில் 22 போ் உயிரிழந்தனா்; 22 போ் குணமடைந்து வீடு திரும்பினா். மேலும், 8 பேருக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...