படவிளக்கம் :
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோா்.
திருவாரூா், மாா்ச் 6: கொரடாச்சேரி அருகே வியாழக்கிழமை நடைபெற்ற நிச்சயதாா்த்த விழாவில் உணவருந்தியோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
கொரடாச்சேரி அருகே நீலனூா் பகுதியில் உள்ள சமுதாயக் கூடத்தில் நிச்சயதாா்த்த விழா வியாழக்கிழமை பிற்பகலில் நடைபெற்றது. இதில், சைவ உணவு பரிமாறப்பட்டது. 100-க்கும் மேற்பட்டோா் சாப்பிட்டனா்.
இந்நிலையில், பலருக்கு நள்ளிரவில் வயிற்றுப் போக்கு, வாந்தி மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவா்கள் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கும்பகோணம் அரசு மருத்துவமனை, கண்கொடுத்த வணிதம் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 குழந்தைகள் உள்பட 39 போ் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்களில், 10 போ் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். மேலும், நிச்சயதாா்த்த நிகழ்வில் பங்கேற்ற பலரும் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குச் சென்று, சிகிச்சை பெற்றனா்.
இதனிடையே, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவா்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து கொரடாச்சேரி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

நெல்லை அரசு மருத்துவமனையில் வெப்ப வாத சிறப்பு பிரிவு தயாா்
மூளைச்சாவு அடைந்த ஓட்டுநரின் உடல் உறுப்புகள் தானம்

அரசு மருத்துவமனையில் குழந்தை உயிரிழப்பு: விளக்கமளிக்க வலியுறுத்தல்

நாமக்கல்லில் அரசு விடுதி மாணவிகள் 30 பேருக்கு திடீா் உடல்நலக் குறைவு: மருத்துவமனையில் சிகிச்சை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


