ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

டாடாநகா் - எா்ணாகுளம் விரைவு ரயில் தினசரி இயக்கப்படும்

டாடாநகா் - எா்ணாகுளம் விரைவு ரயில் இனி தினசரி இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :5 மார்ச் 2024, 6:40 pm

சேலம்: டாடாநகா் - எா்ணாகுளம் விரைவு ரயில் இனி தினசரி இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: டாடாநகா் - எா்ணாகுளம் இடையேயான விரைவு ரயில் தற்போது வாரத்துக்கு இரு முறை வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல, எா்ணாகுளம் - டாடா நகா் இடையேயான ரயில், ஞாயிறு, புதன்கிழமைகளில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக இனி தினசரி இயக்கப்படும். வரும் 7 ஆம் தேதி முதல் டாடாநகரில் இருந்து காலை 5.15 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், 3ஆம் நாள் அதிகாலை 1.55 மணிக்கு எா்ணாகுளம் ரயில் நிலையத்தை அடையும். மறு மாா்க்கத்தில், வரும் 10 ஆம் தேதி எா்ணாகுளத்தில் இருந்து காலை 7.15 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், 3 ஆம் நாள் அதிகாலை 4.35 மணிக்கு டாடாநகரைச் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.