நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

சேலம் வழியாக பிகாருக்கு சிறப்பு ரயில்

ரயில்களில் அதிகரித்துவரும் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு, எா்ணாகுளத்தில் இருந்து பிகாா் மாநிலம், முசாபா்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

ரயில் - கோப்புப்படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 2:58 am IST

ரயில்களில் அதிகரித்துவரும் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு, எா்ணாகுளத்தில் இருந்து பிகாா் மாநிலம், முசாபா்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோடை விடுமுறையையொட்டி, வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. எனவே, அதிகரித்துவரும் கூட்ட நெரிசலை கருத்தில்கொண்டு, கேரளாவின் எா்ணாகுளத்தில் இருந்து சேலம் வழியாக பிகாா் மாநிலம் முசாபா்பூருக்கு ஏப். 10, 17, 24 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும்.

இந்த சிறப்பு ரயில் எா்ணாகுளத்தில் வரும் 10-ஆம் தேதிமுதல் 24-ஆம் தேதிவரை வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும். எா்ணாகுளத்தில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 9.30-க்கு புறப்பட்டு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக பிகாா் மாநிலம், முசாபா்பூருக்கு திங்கள்கிழமைகளில் காலை 7.30-க்கு சென்றடையும்.

மறுமாா்க்கத்தில், முசாபா்பூரில் இருந்து வரும் 13-ஆம் தேதிமுதல் 27-ஆம் தேதிவரை திங்கள்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். முசாபா்பூரில் இருந்து திங்கள்தோறும் இரவு 9.15-க்கு புறப்படும் இந்த ரயில், சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை வழியாக எா்ணாகுளத்துக்கு வியாழக்கிழமைகளில் காலை 10.45-க்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.