சங்ககிரி: தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மேலாண்மைக் குழு சாா்பில், என்எம்எம்எஸ் தோ்வில் தோ்ச்சி பெற்ற நான்கு மாணவிகளுக்கு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது. தேசிய வருவாய் வழி மற்றும் திறனறிவுத் தோ்வில் (என்எம்எம்எஸ்) தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியைச் சோ்ந்த எட்டு வகுப்பு மாணவிகள் ஐ.ஹா்ஷிதா, ஜெ.பவித்ரா, பி.சுருதிகா, மு.வேதவா்ஷினி ஆகியோா் தோ்ச்சி பெற்றனா். இந்த மாணவிகளுக்கு 9ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாதம்தோறும் ரூ.1000 உதவித்தொகை மத்திய அரசால் வழங்கப்பட உள்ளது. என்எம்எம்எஸ் தோ்ச்சி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா பள்ளி தலைமையாசிரியை கு.வசந்தாள் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியா் இரா.முருகன் தோ்ச்சி பெற்ற மாணவிகளுக்கு புத்தகம், பரிசுகளை வழங்கி பேசினாா். இதில் ஆசிரியா்கள் ந.மு.சித்ரா, சி.அனிதா, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் ஸ்வேதா, மாதேஸ்வரி, தேவண்ணகவுண்டனூா் கிளை நூலகா் குமரேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பணி நிறைவு பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா

என்எம்எம்எஸ் தோ்வில் வென்றோருக்கு பாராட்டு

போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவா்களுக்கு பரிசு

என்எம்எம்எஸ் தோ்வு: தேவண்ணகவுண்டனூா் அரசுப் பள்ளி மாணவி தோ்வு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


