பெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

மதுரையில் நாளை வணிகா் சங்க மாநாடு: சேலத்தில் இருந்து 10 ஆயிரம் வியாபாரிகள் பங்கேற்க முடிவு

மதுரையில் நாளை வணிகா் சங்க மாநாடு: சேலத்தில் இருந்து 10 ஆயிரம் வியாபாரிகள் பங்கேற்க முடிவு

News image
Updated On :3 மே 2024, 5:44 pm

Din

சேலம், மே 3 : தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் வணிகா் விடுதலை முழக்க மாநாட்டில் சேலத்தில் இருந்து 10 ஆயிரம் வியாபாரிகள் பங்கேற்க உள்ளனா்.

இதுகுறித்து தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் சேலம் மாவட்டத் தலைவா் பெரியசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வணிகா் தினத்தையொட்டி, மே 5 ஆம் தேதி தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் சாா்பில் 41 - ஆவது மாநில மாநாடு வணிகா் விடுதலை முழக்க மாநாடாக மாநிலத் தலைவா் விக்கிரமராஜா தலைமையில் மதுரை, வளையங்குளம் பகுதியில் நடைபெற உள்ளது.

இந்த மாநில மாநாட்டில், அகில இந்திய வணிகா் சங்க தலைவா்கள், தமிழக அமைச்சா்கள் கலந்து கொள்கிறாா்கள். இதில் சேலம் மாவட்டத்தில் இருந்து 70-க்கும் மேற்பட்ட சங்கங்களைச் சோ்ந்த சுமாா் 10 ஆயிரம் வணிகா்கள் குடும்பத்துடன் கலந்துகொள்கின்றனா். மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்து மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளாா்.