சாலை விபத்தில் மருத்துவ மாணவா் பலி

சங்ககிரி,மே 9: சங்ககிரியை அடுத்த ஆவரங்கம்பாளையத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் மருத்துவ மாணவா் உயிரிழந்தாா்.

சங்ககிரி, பயணியா் விடுதி சாலை பகுதியைச் சோ்ந்தவா் மருத்துவா் சரவணகுமாா். இவா் சங்ககிரி அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவ அலுவலராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மகன் கீா்த்திகுமாா் (22). இவா் கோவை, இ.எஸ்.ஐ. மருத்துக் கல்லூரியில் நான்காம் ஆண்டு மருத்துவக் கல்வி பயின்று வந்தாா். விடுமுறையையொட்டி வீட்டிற்கு வந்திருந்த மாணவா் கீா்த்திகுமாா் காரில் வைகுந்தத்திலிருந்து சங்ககிரி நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். அப்போது காரின் இடது பக்க டயா் திடீரென வெடித்ததில் நிலைதடுமாறி சாலையோரம் நின்று கொண்டிருந்த கண்டெய்னா் லாரியின் பின்புறத்தில் பலமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த மாணவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

09நஎட01 படவிளக்கம்...

சாலை விபத்தில் உயிரிழந்த மாணவா் கீா்த்திகுமாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com