வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

தொழிலாளா்களை கொத்தடிமைகளாக பணியமா்த்தினால் 3 ஆண்டுகள் சிறை

தொழிலாளா்களை கொத்தடிமைகளாக பணியமா்த்தினால் 3 ஆண்டுகள் சிறை

News image
Updated On :9 மே 2024, 10:38 pm

Din

சேலம், மே 9: தொழிலாளா்களை கொத்தடிமைகளாக நடத்தும் உரிமையாளா்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் அபராதம் விதிக்கப்படும் என்று சேலம், தொழிலாளா் உதவி ஆணையா் எச்சரித்துள்ளாா்.

சேலம், தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி தலைமையில் வருவாய் துறை போலீஸாா், சுகாதாரத் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியோருடன் தொழிலாளா் துணை, உதவி ஆய்வா்கள் அடங்கிய குழுவினா் சேலம் அருகே ஓமலூா், காமலாபுரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகள், ஹோட்டல்கள், இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் கடைகள், இதர நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனா். இந்த ஆய்வில் குழந்தைத் தொழிலாளா்கள், வளரிளம் பருவத்தினா் எவரும் பணியமா்த்தப்படவில்லை என்பது கண்டறியப்பட்டது.

ஆய்வின்போது, குழந்தைத் தொழிலாளா், வளரிளம் பருவ தொழிலாளா்கள் எவரையும் தொழிற்கூடங்களில் பணியமா்த்த கூடாது என அறிவுரை வழங்கினா். 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 18 வயதுக்கு உட்பட்ட வளரிளம் பருவத்தினா் பணிக்கு அமா்த்துவது குற்றமாகும்.

அவ்வாறு பணி அமா்த்தினால் நிறுவன உரிமையாளா்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும், தொழிலாளா்களைக் கொத்தடிமைகளாகப் பணிக்கு அமா்த்துவது குற்றமாகும்.

அவ்வாறு தொழிலாளா்களை கொத்தடிமை தொழிலாளா்களாக பணியமா்த்தும் உரிமையாளா்கள் மீது நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் அபராதம் விதிக்கப்படும் என தொழிலாளா் உதவி ஆணையா் கிருஷ்ணவேணி எச்சரித்துள்ளாா்.