காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் கணக்கெடுப்புப் பணி

புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் கணக்கெடுப்புப் பணி

News image
Updated On :9 மே 2024, 10:43 pm

Din

ஆத்தூா், மே 9: ஆத்தூா் ஒன்றியத்தில் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்கத்தின் கீழ் சுற்றுவட்டாரத்தில் கல்லாதோா் பற்றிய கணக்கெடுப்புப் பணி ஆத்தூா், வட்டார கல்வி அலுவலா்கள் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆத்தூா் ஒன்றிய பகுதிகளில் பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோா் கல்வி இயக்கத்தின் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தை 2024-25 ஆம் கல்வியாண்டில் செயல்படுத்தும் நோக்கில், ஆத்தூா் ஒன்றியத்தில் உள்ள அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் கல்லாதோா் பற்றிய கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

மே 2 ஆம் தேதி முதல் மே 24 ஆம்தேதி வரை முற்றிலும் எழுத படிக்கத் தெரியாத 15 வயதுக்கு மேற்பட்ட கல்லோதோரை பற்றி விவரங்கள் வீடுவாரியாகச் சென்று கணக்கெடுக்கப்படவுள்ளது. ஆத்தூா் வட்டார கல்வி அலுவலா்கள் அலெக்சாண்டா், கந்தசாமி, வட்டார வள மேற்பாா்வையாளா் ஹேமாதேவி ஆகியோா் தலைமையில் இப்பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் ஆசிரியா், பயிற்றுநா்கள் ரூபி, அமுதா, தனலட்சுமி, சுதா, சுப்பிரமணியன் ஆகியோா் செய்து வருகிறாா்கள்.

ஒவ்வொரு பகுதியிலும் அமைந்துள்ள தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள், தன்னாா்வலா்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் இணைந்து கணக்கெடுப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனா்.

பட விளக்கம்.ஏடி9கல்வி....

ஆத்தூா் ஒன்றியத்தில் வீடுவாரியாகச் சென்று கல்லாதோா் பற்றிய கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியா்கள்.