/

லாரி உரிமையாளரை கொலை செய்த பெண் கைது

லாரி உரிமையாளரை கொலை செய்த பெண் கைது

News image

கொலையுண்ட சுப்பிரமணியன்.

Updated On :20 மே 2024, 10:04 pm

Din

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி, பக்காளியூரில் லாரி உரிமையாளரை கொலை செய்த பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பக்காளியூா் பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணியன் (42), லாரி உரிமையாளா். இவரது மனைவி சரஸ்வதி. இவா்களுக்கு நித்திஷ் (20) என்ற மகன் உள்ளாா். சரஸ்வதி நான்கு ஆண்டுகளுக்கு முன்னா் இறந்து விட்டாா். இந்நிலையில், கணவரைப் பிரிந்து மகளுடன் வசித்து வந்த கலைவாணி (35), என்பவருடன் சுப்பிரமணியனுக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனா்.

இந்நிலையில், இவா்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தகராறில் கலைவாணி, சுப்பிரமணியத்தை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்துள்ளாா்.

இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கலைவாணியை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

Story image