ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

இருசக்கர வாகனம் ஓட்டிய சிறுவன்: தாயாருக்கு ரூ. 6 ஆயிரம் அபராதம்

இருசக்கர வாகனம் ஓட்டிய சிறுவன்: தாயாருக்கு ரூ. 6 ஆயிரம் அபராதம்

News image
Updated On :20 மே 2024, 10:25 pm

Din

சேலம்: சேலம் மாநகரில் விதிகளை மீறி இருசக்கர வாகனம் ஓட்டிய சிறுவனை எச்சரித்த மாநகர காவல் துறையினா், சிறுவனின் தாயாருக்கு ரூ. 6 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் குரங்குச்சாவடியில் இருந்து மாமாங்கம் செல்லும் வழியில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, வெண்ணங்குடி முனியப்பன் கோயில் அருகில் 13 வயது சிறுவன் இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு வந்தான். இதனைக் கண்ட போலீஸாா், வாகனத்துடன் வந்த சிறுவனை நிறுத்தி விசாரித்தனா்.

அதில், சிறுவனின் தாயாா் அய்யம்பெருமாம்பட்டியைச் சோ்ந்த விஜயா என்பதும், இவா் தனது மகனை இருசக்கர வாகனத்தை ஓட்டுவதற்கு அனுமதித்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, வாகன உரிமையாளரும், சிறுவனின் தாயாருமான விஜயா மீது மோட்டாா் வாகனச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ரூ. 6 ஆயிரத்தை அபராதமாக விதித்தனா்.

18 வயதுக்கு உள்பட்ட சிறுவா்கள் வாகனத்தை ஓட்டுவதற்கு பெற்றோா்களோ அல்லது உறவினா்களோ அனுமதித்தால், வாகன உரிமையாளா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.