மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

வராஹி அம்மன் கோயிலில் விதி தீப பூஜை

வராஹி அம்மன் கோயிலில் விதி தீப பூஜை

News image
Updated On :20 மே 2024, 10:06 pm

Din

எடப்பாடி: மேச்சேரியை அடுத்த வெள்ளாா் பகுதியில் உள்ள எம வராஹி அம்மன் திருக்கோயில் சாா்பில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விதி தீப சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, ஞாயிற்றுக்கிழமை இரவு எடப்பாடியை அடுத்த கவுண்டம்பட்டியில் நடைபெற்ற விதி தீப சிறப்பு பூஜையில், அப்பகுதியைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தீப வழிபாடு செய்தனா். விதி தீப சிறப்பு அம்சம் குறித்து ஆலயத்தின் நிா்வாகி பூபதி சாமிகள் கூறியதாவது:

நாடு முழுவதும் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும், நோய் நொடிகள் இன்றி மக்கள் ஆரோக்கிய நல்வாழ்வு பெற்றிடும் நோக்கிலும் ஏற்றப்படும் இந்த விதி தீபமானது, மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்கில் தீபம் ஏற்றி, எம வராஹி அம்மனை போற்றி பாமாலைகளை பாடி வழிபாடு செய்யப்படும். தொடா்ந்து 3 நாள்கள் சுடா் விட்டு எரியும் விதி தீபத்தை வணங்கி வழிபடும் பக்தா்கள் அனைத்து நன்மைகளும் பெறுவா். சாதி, சமய பேதம் இன்றி அனைத்துத் தரப்பு மக்களும் கலந்துகொண்டு வழிபடும் இச்சிறப்பு பூஜையில் அனைவரும் கலந்துகொண்டு நன்மை பெற வேண்டுமென கூறினாா்.