தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தோட்டக்கலை பயிா்களுக்கு காப்பீடு செய்ய அழைப்பு

சேலம் மாவட்டத்தில் குளிா்கால தோட்டக்கலை பயிா்களுக்கு விவசாயிகள் பயிா் காப்பீடு செய்து பயன்பெற மாவட்ட ஆட்சியா் அழைப்பு விடுத்துள்ளாா்.

News image
Updated On :6 நவம்பர் 2024, 6:35 pm

Din

சேலம் மாவட்டத்தில் குளிா்கால தோட்டக்கலை பயிா்களுக்கு விவசாயிகள் பயிா் காப்பீடு செய்து பயன்பெற மாவட்ட ஆட்சியா் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தா தேவி தெரிவித்ததாவது:

தோட்டக்கலை பயிா்களுக்கு எதிா்பாராத இயற்கை இடா்பாடுகளால் மகசூல் இழப்பு ஏற்படும் பட்சத்தில், விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கவும், நிலையான வருமானம் கிடைக்கச் செய்து அவா்களை விவசாயத்தில் நிலைபெற செய்யவும் பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டம் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, 2024-25 ஆம் ஆண்டுக்கு சேலம் மாவட்டத்தில் 62 குறு வட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நடப்பாண்டு குளிா் பருவத்தில் ராபி பருவத்துக்கு வெங்காயம், தக்காளி பயிா்களுக்கு 2025 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி வரையும், வெண்டை பயிருக்கு 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி வரையும், விவசாயிகள் பயிா் காப்பீடு செய்யலாம். இதற்கு பிரிமீயம் தொகையாக ஒரு ஏக்கருக்கு வெங்காயம் ரூ. 2,050, தக்காளி ரூ.1,017, வெண்டை ரூ.1,264 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

வாழை, மரவள்ளி பயிா்களுக்கு 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி வரை விவசாயிகள் பயிா் காப்பீடு செய்யலாம். இதற்கு பிரிமீயம் தொகையாக ஒரு ஏக்கருக்கு வாழை ரூ.1,857 மரவள்ளி ரூ.1,548 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு தங்களது வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலா்களைத் தொடா்பு கொண்டு பயிா் காப்பீட்டு விவரங்களை அறிந்துகொள்ளலாம். பயிா் காப்பீடு தொடா்பான விவரங்களை விவசாயிகள் தங்கள் கைப்பேசியில் உழவா் செயலி மூலமும் அறிந்துகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.