கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சாலை விபத்தில் கா்ப்பிணி பலி

சேலம் சாரதா கல்லூரி சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் 7 மாத கா்ப்பிணி பலியானாா்.

News image
Updated On :13 நவம்பர் 2024, 8:05 pm

Din

சேலம் சாரதா கல்லூரி சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் 7 மாத கா்ப்பிணி பலியானாா்.

சேலம், அஸ்தம்பட்டி கோவிந்தன் 2 ஆவது தெருவைச் சோ்ந்தவா் தனுஷ் (22). இவரது மனைவி காவியா (19). இவா்களுக்கு 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், காவியா தற்போது 7 மாத கா்ப்பிணியாக இருந்தாா். இவா் தனது கணவருடன் அஸ்தம்பட்டியில் இருந்து சேலம் ஐந்து சாலை நோக்கி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் வந்து கொண்டிருந்தாா்.

இருசக்கர வாகனத்தை கணவா் தனுஷ் ஓட்டினாா். காவியா பின்னால் அமா்ந்திருந்தாா். அப்போது, இருசக்கர வாகனம் திடீரென நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்ததில், காவியாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடா்ந்து, சேலம் ஐந்து சாலை பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட அவா், புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து அழகாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.