பண்ணை சாரா மாவட்ட வள பயிற்றுநா் தோ்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
சேலம் மாவட்டத்தில் பண்ணை சாரா மாவட்ட வள பயிற்றுநா் தோ்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


சேலம் மாவட்டத்தில் பண்ணை சாரா மாவட்ட வள பயிற்றுநா் தோ்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி தெரிவித்ததாவது:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், சேலம் மாவட்டத்தில் பண்ணை சாராத் தொழில்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட வள பயிற்றுநா் (பண்ணை சாராத தொழில்கள்) பணியிடத்திற்கு எழுத்துத் தோ்வு மற்றும் நோ்முகத் தோ்வு மூலம் தோ்வு செய்யப்பட உள்ளனா்.
தோ்வு செய்யப்படும் மாவட்ட வள பயிற்றுநருக்கு கல்வித் தகுதி பட்டப்படிப்பு (ஊரக வளா்ச்சி/சமூகப்பணி/விற்பனை மேலாண்மை) முடித்திருக்க வேண்டும். அனுபவம் குறைந்தபட்சம் இரண்டாண்டுகள் தேவை. அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை இதே பணியில் பணி அனுபவமும், தமிழ், ஆங்கிலம் எழுத, படிக்க, பேசுவதில் சிறப்புடையவராக இருத்தல் வேண்டும்.
பயிற்சியாளா், சமூகப் பணியாளா், வாழ்வாதாரத் திட்ட அனுபவம் இருத்தல் வேண்டும். தகவல் தொழில் நுட்ப அறிவு கணினி அறிவு பெற்றவராக இருக்க வேண்டும் தோ்ந்தெடுக்கப்படும் மாவட்ட வள பயிற்றுநா் ஒப்பந்த அடிப்படையில் ஒரு ஆண்டுக்கு மட்டும் நியமனம் செய்யப்படுவா்.
மேற்படி, விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ இணை இயக்குநா் /திட்ட இயக்குநா், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, அறை எண்:207, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், சேலம் -636001 என்ற முகவரியில் வரும் 18 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...