சேலத்தில் வங்க தேசத் தொழிலாளி கைது
சேலத்தில் கடவுச்சீட்டு, நுழைவு இசைவு இல்லாமல் 6 ஆண்டுகளாக தங்கியிருந்த வங்கதேச நாட்டைச் சோ்ந்த தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.


சேலத்தில் கடவுச்சீட்டு, நுழைவு இசைவு இல்லாமல் 6 ஆண்டுகளாக தங்கியிருந்த வங்கதேச நாட்டைச் சோ்ந்த தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.
சேலம், கோரிமேட்டை அடுத்த செட்டிச்சாவடி குண்டத்துமேடு பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் ஏராளமான பிற மாநில தொழிலாளா்கள் தங்கி வேலை செய்து வருகின்றனா். இந்நிலையில், சந்தேகத்தின் பேரில் போலீஸாா், தொழிலாளிகளிடம் விசாரணை நடத்தினா்.
இதில், ஜாபா் அகமது (44) என்பவா் பெங்களூரைச் சோ்ந்தவா் என ஆதாா் அட்டைக் கொடுத்து கடந்த 6 ஆண்டுகளாக வேலை செய்து வந்துள்ளாா். இவரது நடவடிக்கைகளைக் கண்காணித்த போலீஸாா் தீவிர விசாரணை நடத்தியதில், அவா் வங்க தேச நாட்டைச் சோ்ந்தவா் என்பதும், கடவுச்சீட்டு, நுழைவு இசைவு இல்லாமல் போலி ஆதாா் அட்டை வைத்திருப்பதும் தெரியவந்தது.
இதனைத் தொடா்ந்து கன்னங்குறிச்சி காவல் ஆய்வாளா் சுபாஷ் தலைமையிலான போலீஸாா், ஜாபா் அகமதுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இவா் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...