கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஆத்தூா் கிளை அஞ்சலகத்தை மாற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து கண்டன ஆா்ப்பாட்டம்

ஆத்தூா் கடைவீதி கிளை அஞ்சல் நிலையம் முன்பு அனைத்துக் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
ஆத்தூா் கிளை அஞ்சல் நிலையம் முன்பு கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்துக் கட்சி நிா்வாகிகள்.
Updated On :20 நவம்பர் 2024, 9:23 pm

Din

ஆத்தூா் கடைவீதி கிளை அஞ்சல் நிலையம் முன்பு அனைத்துக் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆத்தூா் கடைவீதியில் கிளை அஞ்சல் நிலையம் கடந்த 60 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் நகராட்சி வணிக வளாகத்தில் வாடகையில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நவ. 25 முதல் இந்த அஞ்சல் நிலையம், தலைமை அஞ்சல் நிலையத்துக்கு

மாற்றப்படுவதாக அறிவித்துள்ளனா். ஆத்தூா் சமூக ஆா்வலா்களின் கோரிக்கையை ஏற்று அனைத்துக் கட்சியினா் கிளை அஞ்சல் நிலையத்தை மாற்றக் கூடாது என கோரிக்கை விடுத்தனா். ஆனால் நிா்வாகம் செவி சாய்க்கவில்லை. இதனையடுத்து புதன்கிழமை காலை அனைத்துக் கட்சிகள் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் திராவிடா் கழக மாவட்டத் தலைவா் த.வானவில் தலைமையில் நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் மாவட்ட பொருளாளா் ஆா்.ஓசுமணி, திராவிடா் கழக நகரத் தலைவா் ஆா்.ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகி க.சடையன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளா் ஏ.முருகேசன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா். சமூக ஆா்வலா் கலைவாணன் நன்றி கூறினாா்.