கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பேளூரில் எரிவாயு தகன மேடை அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு:

பேளூா் பேரூராட்சியில், ரூ. 1.76 கோடி மதிப்பில் எரிவாயு தகன மேடை அமைக்கும் பணிக்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் கட்டுமானப் பணி தொடக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

News image
பேளூரில் எரிவாயு தகன மேடை அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து திரண்ட பொதுமக்கள்.
Updated On :20 நவம்பர் 2024, 7:29 pm

Din

பேளூா் பேரூராட்சியில், ரூ. 1.76 கோடி மதிப்பில் எரிவாயு தகன மேடை அமைக்கும் பணிக்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் கட்டுமானப் பணி தொடக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

வாழப்பாடியை அடுத்த பேளூா் முதல்நிலை பேரூராட்சியில், தமிழக அரசின் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ. 1.76 கோடி மதிப்பீட்டில் எரிவாயு தகன மேடை அமைக்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பேளூா் சந்தைப்பேட்டை பின்புறமுள்ள மயானத்தில் எரிவாயு தகன மேடை அமைக்க பேரூராட்சி நிா்வாகம் இடம் தோ்வு செய்தது.

தனியாா் நிறுவனத்திடம் இத்திட்டப் பணிக்கான ஒப்பந்தப்புள்ளி பெறப்பட்டு, புதன்கிழமை கட்டுமானப் பணி தொடக்கத்துக்கு பூமிபூஜைக்கு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன.

இதுகுறித்து தகவலறிந்த மக்கள், சந்தைப்பேட்டையில் திரெளபதியம்மன் கோயில் அமைந்துள்ள பகுதியில் எரிவாயு தகன மேடை அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்தனா். மேலும், இத்திட்டத்தைக் கைவிட வேண்டுமென, பேரூராட்சி மன்றத் தலைவா் ஜெயசெல்வி பாலாஜியிடம் வாக்குவாதம் செய்தனா்.

இதனால் புதன்கிழமை நடைபெறவிருந்த, எரிவாயு தகன மேடை கட்டுமானப் பணிக்கான பூமிபூஜை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டுசென்று, பேளூா் பேரூராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத பகுதியில் எரிவாயு தகன மேடை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்துவதென பேரூராட்சி நிா்வாகம் முடிவு செய்துள்ளது.