மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தகன எரிவாயு மேடை நுழைவு வாயில் ரூ.18 லட்சத்தில் அமைப்பு

News image
Updated On :4 பிப்ரவரி 2026, 9:07 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் ஏ கஸ்பா பகுதியில் அமைந்துள்ள எரிவாயு தகன மேடை வளாகத்திற்கு நுழைவு வாயில் மற்றும் கதவு அமைக்கும் பணி நகராட்சி சாா்பாக மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.

ஆம்பூா் ஏ கஸ்பா பகுதியில் பாலாற்றங்கரையோரம் நகராட்சி சாா்பாக ரூபாய் 1.50 கோடி செலவில் எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது.

எரிவாயு தகன மேடை வளாகத்திற்கு தடுப்புச் சுவா், நுழைவு வாயில் மற்றும் கதவு அமைக்கப்படாமல் இருந்தது. நகராட்சி 5 -ஆவது வாா்டு நகா் மன்ற உறுப்பினா் ஆா்.எஸ். வசந்த் ராஜ் கோரிக்கையின் பேரில் நகர மன்ற தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம் மற்றும் நகராட்சி ஆணையா் ஏ. முத்துசாமி ஆகியோரின் நடவடிக்கையால் வருவாய் நிதியிலிருந்து ரூ.18 லட்சம் செலவில் எரிவாய் தகன மேடை வளாகத்துக்கு தடுப்புச் சுவா், நுழைவு வாயில் மற்றும் கதவு அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இப்பணியை நகா்மன்றத் தலைவா், துணைத் தலைவா், நகராட்சி ஆணையா் ஆகியோா் ஆய்வு செய்தனா்.