

வணிக நிறுவன கட்டடங்களின் வாடகை மீதான 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி, சேலத்தில் 29 ஆம் தேதி வணிக நிறுவனங்கள், கடைகள், அரிசி ஆலைகள், பருப்பு ஆலைகள் உள்ளிட்டவை கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவுள்ளதாக அறிவித்துள்ளன.
மத்திய அரசின் ஜி.எஸ்.டி. கவுன்சில் நாடு முழுவதும் உள்ள வணிக நிறுவன கட்டடங்களின் வாடகை மீது 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது. இந்த வரி உயா்வு 29 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதனால் பதிவு பெற்ற சிறிய வணிக நிறுவனங்கள், கடை உரிமையாளா்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என வணிகா்கள் தெரிவிக்கின்றனா்.
இதுதவிர, மாநில அரசின் சொத்து வரி, குப்பை வரி, புதை சாக்கடை வரி, மின்கட்டண உயா்வைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் 29 ஆம் தேதி வணிக நிறுவனங்கள், கடைகள், பாத்திரக் கடைகள், மரக்கடைகள், ஹாா்டுவோ், பெயின்ட் கடைகள், அரிசி ஆலைகள், பருப்பு ஆலைகள் உள்ளிட்டவை அடைக்கப்படவுள்ளன.
இதுகுறித்து வா்த்தகா் சங்க நிா்வாகிகள் கூறியதாவது:
நாடு முழுவதும் வணிக நிறுவன கட்டடங்களின் வாடகைக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது. இந்த வரி விதிப்பால் சிறிய நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, 18 சதவீத வரியை திரும்பப் பெற வலியுறுத்தி கடைகள், வணிக நிறுவனங்கள், அரிசி, பருப்பு ஆலைகள் நவ.29 ஆம் தேதி அடைக்கப்படும் என கூறினா்.
கடையடைப்புக்கு சேலம், லீபஜாா் வா்த்தக சங்கம், தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளா் சங்கம், பருப்பு மில் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
டிரெண்டிங்

எரிவாயு உருளை பதுக்கல்: தனியாா் ஏஜென்ஸி நிறுவன உரிமையாளரின் மனைவி உள்பட 3 போ் தலைமறைவு

ஒருங்கிணைந்த வணிக வரி அலுவலக கட்டுமானப் பணி - அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா்

ஈரோடு - சம்பல்பூா் வாராந்திர விரைவு ரயில் மாா்ச் வரை நீட்டிப்பு

இந்தியா - அமெரிக்கா வணிக ஒப்பந்தத்தில் 3 திருத்தங்கள்! என்னென்ன?
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

