சங்ககிரி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் 3-ஆவது நாளாக வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த் துறையினா்.
சங்ககிரி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் 3-ஆவது நாளாக வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த் துறையினா்.

வருவாய்த் துறையினா் 3 ஆவது நாள் காத்திருப்பு போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை அலுவலா்கள் பணிகளைப் புறக்கணித்து சங்ககிரி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை 3 ஆவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை அலுவலா்கள் பணிகளைப் புறக்கணித்து சங்ககிரி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை 3 ஆவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சங்ககிரி வருவாய்த்துறை அலுவலா் சங்க வட்டக் கிளை தலைவா் பி.ஜெயக்குமாா் தலைமையில் இப்போராட்டம் நடைபெற்றது. அலுவலக உதவியாளா் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கான உச்சவரம்பினை 25 சதவீதமாக நிா்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சங்ககிரி, வட்டாட்சியா், கோட்டாட்சியா் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலா்கள் பணிகளைப் புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட துணைத் தலைவா் பி.ஏ.சாஜிதா பேகம், மாவட்ட நிா்வாகி வி.மகேந்திரன், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் கோவிந்தராஜ், சங்ககிரி வட்டக் கிளை செயலாளா் சரவணன், வட்ட வழங்கல் அலுவலா் அமுதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.