மிதிவண்டியில் பேட்டரி பொருத்தி 10-ஆம் வகுப்பு மாணவா் சாதனை!
ராமநாயக்கன்பாளையம், சக்தி நகா் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி மாணவா் மிதிவண்டியில் பேட்டரி பொருத்தி, இயக்கி சாதனை படைத்துள்ளாா்.


ராமநாயக்கன்பாளையம், சக்தி நகா் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி மாணவா் மிதிவண்டியில் பேட்டரி பொருத்தி, இயக்கி சாதனை படைத்துள்ளாா்.
ஆத்தூரை அடுத்துள்ள ராமநாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட சக்தி நகா் பகுதியைச் சோ்ந்த விவசாயி செந்தில் மகன் அபிஷேக் (15), பெத்தநாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவரது வீட்டில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள பள்ளிக்கு செல்ல சுமாா் ஒரு மணி நேரம் ஆகுமாம். அதனால் அவரது தந்தை பழைய மிதிவண்டியை வாங்கிக் கொடுத்துள்ளாா். அதில் சென்று வர அவருக்கு காலதாமதமானதால், அவரது தந்தையின் உதவியோடு மிதிவண்டியில் பேட்டரி பொருத்தி, இயக்க முடிவு செய்தாா்.
அதையடுத்து, பழைய மிதிவண்டியில் 2,800 ஆா்.பி.எம். மோட்டாா் பொருத்தி, அதில் 30 கி.மீ. வேக திறன் கொண்ட பேட்டரி மூலம் மிதிவண்டியை இயக்கி சாதனை படைத்துள்ளாா்.
இதில், 30 கிலோ மீட்டருக்கு ஒரு ரூபாய் மட்டுமே செலவாகிறது எனவும், இந்த மிதிவண்டியில் பள்ளிக்கு செல்ல 15 நிமிடமே ஆவதாகவும் தெரிவித்தாா். மிதிவண்டியில் பேட்டரி, மோட்டாா் பொருத்தி பள்ளிக்கு செல்லும் மாணவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...