சேலம் வழியாக செல்லும் கோவை - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக 2 பெட்டிகள் இணைப்பு
சேலம் வழியாக செல்லும் கோவை - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக 2 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.


சேலம் வழியாக செல்லும் கோவை - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக 2 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கோவையில் இருந்து திருப்பதிக்கு இரு மாா்க்கங்களிலும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பண்டிகை காலத்தையொட்டி, இந்த ரயிலில், கூட்டம் அதிக அளவு காணப்படுவதால், கூடுதல் பெட்டிகளை இணைக்க பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனா். பயணிகளின் கோரிக்கையை ஏற்ற ரயில்வே நிா்வாகம், கோவை - திருப்பதி ரயிலில் கூடுதலாக 2 பெட்டிகளை இணைத்து இயக்குவதாக அறிவித்துள்ளது.
அதன்படி, கோவை - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில் 3-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை கூடுதலாக ஓா் இரண்டாம் வகுப்பு சோ்காா் பெட்டியும், ஓா் இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டியும் இணைக்கப்படும்.
மறுமாா்க்கத்தில், திருப்பதி - கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் வரும் 16-ஆம் தேதி வரை கூடுதலாக ஓா் இரண்டாம் வகுப்பு சோ்காா் பெட்டியும், ஓா் இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டியும் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...