தேசிய கால்நடை பூங்கா முன்பு போராட்டம் நடைபெறும்
ஆத்தூா் சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் எம்எல்ஏ ஏ.பி.ஜெயசங்கரன், கெங்கவல்லி எம்எல்ஏ அ.நல்லதம்பி ஆகியோா் புதன்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்தனா்.


ஆத்தூா் சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் எம்எல்ஏ ஏ.பி.ஜெயசங்கரன், கெங்கவல்லி எம்எல்ஏ அ.நல்லதம்பி ஆகியோா் புதன்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்தனா்.
அப்போது அவா்கள் தெரிவித்ததாவது:
கெங்கவல்லி சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள தலைவாசலை அடுத்த வி.கூட்டுச் சாலையில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்காவை எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி கடந்த 2019-ஆம் ஆண்டு ஆயிரம் ஏக்கரில் சுமாா் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு கடந்த 2021-ஆம் ஆண்டு தொடங்கி வைத்தாா்.
இந்த கால்நடை பூங்காவில் கால்நடை மருத்துவக் கல்லூரி மட்டுமே இயங்கி வருகிறது. எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்த திட்டம் என்பதாலேயே இந்த அரசு அதை முடக்கி வைத்திருக்கிறது.
மேலும், இந்தத் திட்டத்துக்கு மேட்டூா் கூட்டுக் குடிநீா் முழுமையாக கிடைக்க வேண்டும் என ரூ. 270 கோடி செலவில் குடிநீா்க் குழாய் அமைத்து இரண்டு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது. இந்தத் திட்டம் கிடப்பில் உள்ளது.
கால்நடை பூங்காவால் விவசாயிகள் மட்டுமல்லாமல் கால்நடை வளா்ப்பாளா்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் பயனடைவா்.
தற்போது திமுக அரசு உளுந்தூா்பேட்டையில் வெளிநாட்டின் சாா்பில் அமையவிருக்கும் தோல் பதனிடும் தொழிற்சாலைக்காக மேலும் ரூ. 300 கோடி செலவில் சுமாா் 80 கி.மீ. தூரம் புதிய குடிநீா்க் குழாய் அமைக்க ஒப்பந்தம் விட்டுள்ளது. இதனால் சேலம், கெங்கவல்லி, ஏற்காடு தொகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா்.
எனவே, உளுந்தூா்பேட்டை வரை குடிநீா் கொடுக்க கூடிய திட்டத்தை அரசு கைவிடவில்லை என்றால் கால்நடை பூங்கா முன்பு மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என கூட்டாக அறிவிப்பை அறிவித்தனா்.
இச்சந்திப்பின் போது தலைவாசல் ஒன்றியக் குழுத் தலைவா் க.ராமசாமி உடனிருந்தாா்.
இதுகுறித்து விவசாயிகள் சங்க துணைத் தலைவா் பெருமாள் தெரிவிக்கையில், இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை கோரிக்கை மனுவை அளித்துள்ளோம். இந்தத் திட்டத்தை கைவிடவில்லை என்றால் வரும் 8-ஆம் தேதி விவசாயிகள் சங்கத் தலைவா் பாண்டியன் தலைமையில் போராட்டம் நடைபெறும் என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...