ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வாழப்பாடி, பேளூா் சாலை விரிவாக்கப் பணி

வாழப்பாடி, பேளூா் பேரூராட்சியில் சாலைகள் விரிவாக்கப் பணிகளுக்கு இடையூறாக உள்ள மரங்களை சேலம் கோட்டாட்சியா் நேரில் ஆய்வு செய்தாா்.

News image
வாழப்பாடியை அடுத்த பேளூரில் சாலை விரிவாக்கப் பணிகளை ஆய்வு செய்த சேலம் கோட்டாட்சியா் அபிநயா, வருவாய்த் துறை, நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள்.
Updated On :3 அக்டோபர் 2024, 11:49 pm

Din

வாழப்பாடி, பேளூா் பேரூராட்சியில் சாலைகள் விரிவாக்கப் பணிகளுக்கு இடையூறாக உள்ள மரங்களை சேலம் கோட்டாட்சியா் நேரில் ஆய்வு செய்தாா்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே பேளூா் பேரூரட்சியில் பிரசித்தி பெற்ற தான்தோன்றீஸ்வரா் கோயில், அயோத்தியாப்பட்டணம் சாலையில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தா்கள் வந்து செல்கின்றனா். இச்சாலையில் பேருந்து நிலையம், அரசுப் பள்ளிகள், கடைவீதிகள் அமைந்துள்ளதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. எனவே, இச்சாலையை விரிவுபடுத்த வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதனையடுத்து, இச்சாலையை மேம்படுத்த தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தமிழக அரசு ரூ. 4.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

சாலை விரிவாக்கப் பணிகளுக்கு இடையூறாக உள்ள புளிய மரங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணிகளை வாழப்பாடி உள்கோட்ட நெடுஞ்சாலைத் துறை, வனத்துறையினா் கடந்த மாதம் மேற்கொண்டனா்.

இதனையடுத்து, சாலை ஆக்கிரமிப்புகள், சாலை விரிவாக்கப் பணிகளுக்கு இடையூறாக உள்ள மரங்களை அகற்றுவது குறித்து சேலம் கோட்டாட்சியா் அபிநயா நேரில் பாா்வையிட்டாா். வாழப்பாடி - திம்மநாயக்கன்பட்டி சாலையில் இருந்து செல்லும் பொன்னாரம்பட்டி பிரிவு சாலை சந்திப்பு பகுதியில் சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு இடையூறாக உள்ள மரங்களை அகற்றுவது குறித்தும் ஆய்வு செய்தாா்.

வாழப்பாடி வட்டாட்சியா் ஜெயந்தி, நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளா் மணிவண்ணன், உதவிப் பொறியாளா் ராஜேஷ்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.