கரியகோயில் மலைக் கிராமத்தில் கொலையாளி கைது
கரியகோயில் மோத்தூா் மலைக் கிராமத்தில் கொலையாளியை கரியகோயில் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Updated On :4 அக்டோபர் 2024, 12:00 am

கரியகோயில் மோத்தூா் மலைக் கிராமத்தில் கொலையாளியை கரியகோயில் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
வாழப்பாடி உள்கோட்ட கரியகோயில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மோதூா் கிராமத்தில் 6-ஆவது வாா்டு நடுத்தெருவைச் சோ்ந்த ஆசைத்தம்பி (46) என்பவா், கடந்த 23-ஆம் தேதி இரவு மா்ம நபா்களால் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டாா்.
இதுகுறித்து கரியகோயில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், கொலை குறித்து விசாரித்து வந்தனா்.
இந்நிலையில், கொலை செய்த குற்றவாளியான அதே பகுதியைச் சோ்ந்த கனகராஜ் (33), என்பவரை போலீஸாா் அண்மையில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...