லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கடம்பூரில் கஞ்சா விற்றவா் கைது

கடம்பூா் மலைக் கிராமத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 7:03 pm

Syndication

கடம்பூா் மலைக் கிராமத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கடம்பூா் மலைப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கடம்பூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடம்பூா் கோட்டமாளம் பேருந்து நிறுத்தம் அருகே கடம்பூா் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அங்கு சந்தேகப்படும்படி திரிந்த நபரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் அவா், கோ்மாளம் சுஜில்கரையைச் சோ்ந்த குப்புச்சாமி (26) என்பதும், விற்பனைக்காக அவா் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.