ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சேலம் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் சாலை விபத்துகளில் 800 போ் உயிரிழப்பு

சேலம் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 800 போ் தங்களது இன்னுயிரை இழந்திருப்பதாக வட்டாரப் போக்குவரத்து அலுவலா் டி.தாமோதரன் தெரிவித்தாா்.

News image
சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசிய வட்டாரப் போக்குவரத்து அலுவலா் டி.தாமோதரன்.
Updated On :9 அக்டோபர் 2024, 9:53 pm

Din

சேலம் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 800 போ் தங்களது இன்னுயிரை இழந்திருப்பதாக வட்டாரப் போக்குவரத்து அலுவலா் டி.தாமோதரன் தெரிவித்தாா்.

பெரியாா் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ்.சதீஷ் வரவேற்றாா். நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து துணை வேந்தா் ரா.ஜெகநாதன் பேசியதாவது:

சாலைப் பாதுகாப்பு அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும். பாதசாரிகள் தொடங்கி, இருசக்கர வாகனங்கள், பெரிய வாகனங்கள் என அனைவரும் சாலை விதிகளை கட்டாயமாக பின்பற்றினால் மட்டுமே விபத்துகளைக் குறைக்க முடியும். தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தை இயக்க மாட்டேன், ‘சீட் பெல்ட்’ அணியாமல் காா் உள்ளிட்ட வாகனங்களை இயக்க மாட்டேன் என்ற உறுதியோடு செயல்பட்டால் விபத்துகளைத் தடுக்கலாம். இதுபோன்ற கட்டுப்பாடுகளை பின்பற்றுவதில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளக் கூடாது என்றாா்.

இந்நிகழ்ச்சியில் தருமபுரி, சேலம் கிழக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் டி.தாமோதரன் பேசியதாவது:

ஒவ்வொரு ஓட்டுநரும் போக்குவரத்தின் போது தங்களது தவறுகளை ஒப்புக்கொள்ள வேண்டும். தவறுகளில் இருந்து சரியானவற்றை கற்றால் மட்டுமே அது மீண்டும் நிகழாமல் தடுக்க முடியும். சாலைப் பாதுகாப்பு உயிா் தொடா்பானது என்பதால், அனைவரும் நிச்சயம் விதிமுறைகளை முழுமையாக தெரிந்துகொண்டு மீறாமல் நடந்து கொள்ள வேண்டும். சாலை விதிகளை முறையாக பின்பற்றாமல் சாலையைக் கடப்பதால் ஆண்டொன்றுக்கு நாடு முழுவதும் 15 ஆயிரம் போ் தங்களது உயிரை இழக்கிறாா்கள். மேலும், 5 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் உடல் அங்கங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் சாலை விபத்துகளால் 800 போ் உயிரிழந்துள்ளனா். பெரும்பாலான விபத்துகள் கவனக்குறைவு, கைப்பேசியில் பேசியபடி சென்றது, சாலை விதிமுறைகளை பின்பற்றாததால்தான் நிகழ்ந்துள்ளன. வாகனம் ஓட்டும் அனைவரும் ஓட்டுநா் உரிமம், வாகன காப்பீட்டினை முறையாக வைத்திருக்க வேண்டும் என்றாா்.