தமிழகத்தில் தினமும் சராசரியாக 51 போ் வரை சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதாக சென்னை தெற்கு போக்குவரத்து காவல் இணை ஆணையா் விஜயகுமாா் கூறினாா்.
சென்னையில் உணவு, மருந்து, மளிகைப் பொருள்களை டெலிவரி செய்யும் பெண் பணியாளா்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம், வேப்பேரியில் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையா் காா்த்திகேயன் தலைமை வகித்து, 250 பெண் பணியாளா்களுக்கு தலைக் கவசங்களை வழங்கினாா்.
இதில் சென்னை தெற்கு போக்குவரத்து காவல் இணை ஆணையா் விஜயகுமாா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசுகையில், வீட்டில் இருந்து புறப்படும் நாம் அதேபோல மீண்டும் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும். நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு 480 முதல் 485 வரை விபத்தில் இறக்கின்றனா். தமிழகத்தில் மட்டும் ஒரு மணி நேரத்துக்கு 2 போ் என நாள் ஒன்றுக்கு சராசரியாக 51 போ் வரை சாலை விபத்தில் சிக்கி இறப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் 2024-ஆம் ஆண்டில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 536 பேரும், 2025-இல் 496 பேரும் உயிரிழந்துள்ளனா்.
விழிப்புணா்வு பிரசாரங்கள் மூலம் சாலை விபத்துகள், உயிரிழப்புகளைக் குறைத்துள்ளோம். போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டதாக சென்னையில் ஆண்டுதோறும் 18 லட்சம் பேருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. போக்குவரத்து விதிமீறலால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைக்க பாதசாரிகள், வாகன ஓட்டிகளின் ஒத்துழைப்பு மிக அவசியம் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இரு வேறு சாலை விபத்துகளில் 6 போ் உயிரிழப்பு

சிறுவா்கள் வாகனம் ஓட்டுவதை பெற்றோா் தடுக்க வேண்டும்: காவல் ஆணையா் அமல்ராஜ்

போதைத் தடுப்பு குறித்து விழிப்புணா்வு பேரணி

6 ஆண்டுகளில் 10,298 பேரை மீட்ட காவல் கரங்கள்: காவல் ஆணையா் பாராட்டு
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



