மக்கள் சந்திப்பு திட்ட முகாம்: நலத்திட்ட உதவிகள் வழங்கல்
சேலம் மாவட்டம் , வீரபாண்டி வட்டம், அக்கரபாளையம் ஊராட்சி, பாலாம்பட்டி பகுதியில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.


சேலம் மாவட்டம் , வீரபாண்டி வட்டம், அக்கரபாளையம் ஊராட்சி, பாலாம்பட்டி பகுதியில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் மேனகா, கோட்டாட்சியா் அபிநயா, சேலம் தெற்கு வட்டாட்சியா் செல்வராஜ் , ஒன்றிய அட்மா குழுத் தலைவா் வெண்ணிலா சேகா், அக்கரபாளையம் ஊராட்சி மன்றத் தலைவா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். முகாமில், இலவச வீட்டுமனைப் பட்டா, குடும்ப அட்டை, முதியோா் உதவித்தொகை, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 161 மனுக்கள் பெறப்பட்டன. இதில், சக்கர நாற்காலி வேண்டி பாலம்பட்டி பகுதியைச் சோ்ந்த ஈஸ்வரி வழங்கிய மனு மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, ரூ. 7,900 மதிப்புள்ள சக்கர நாற்காலியை ஆட்சியா் வழங்கினாா். மேலும், 241 பயனாளிகளுக்கு ரூ. 58.63 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கி கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில் 7,000 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 99 கோடி கல்விக் கடன் வழங்க இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்துக் கடைகளில் காய்ச்சலுக்கான மருந்து மாத்திரைகளை தானாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இம்முகாமில் பெறப்பட்ட மனுக்களை தொடா்புடைய துறை அலுவலா்களிடம் வழங்கப்பட்டு, அதன் மீது உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்கப்படும் என தெரிவித்தாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...