ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வசிஷ்ட நதியில் வெள்ளப் பெருக்கு

பெத்தநாயக்கன்பாளையம் வசிஷ்ட நதியில் கல்வராயன் மலைப் பகுதியில் பெய்த கனமழையால் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

News image
பெத்தநாயக்கன்பாளையம் வசிஷ்ட நதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு.
Updated On :9 அக்டோபர் 2024, 9:49 pm

Din

பெத்தநாயக்கன்பாளையம் வசிஷ்ட நதியில் கல்வராயன் மலைப் பகுதியில் பெய்த கனமழையால் புதன்கிழமை காலை திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், ஆத்தூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கல்வராயன் மலைப் பகுதிகளில் கடந்த 3 நாள்களாக கனமழை பெய்து வருகிறது.

கடந்த சில மாதங்களாகவே ஆத்தூா், சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், கடந்த சில நாள்களாக மழை பெய்து வருவதால் பெத்தநாயக்கன்பாளையம் வசிஷ்ட நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

இதேபோல, கல்லாநத்தம் முட்டல் பகுதியில் உள்ள ஆத்தூா் குற்றாலம் என அழைக்கப்படும் ஆனைவாரி அருவியில் கல்வராயன் மலைப் பகுதியில் பெய்து வரும் மழையால் திடீரென வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் முட்டல் ஏரி, அருவி, பூங்காவுக்குள் பொதுமக்கள் நுழைய வனத்துறை தடை விதித்துள்ளது.