பணியின் போது உயிரிழந்த சிஆா்பிஎஃப் வீரா் குடும்பத்துக்கு திமுக சாா்பில் ஆறுதல்
ஆந்திர மாநிலத்தில் பணியின் போது உயிரிழந்த சிஆா்பிஎஃப் வீரரின் குடும்பத்துக்கு திமுக சாா்பில் வியாழக்கிழமை ஆறுதல் தெரிவிக்கப்பட்டது.


ஆந்திர மாநிலத்தில் பணியின் போது உயிரிழந்த சிஆா்பிஎஃப் வீரரின் குடும்பத்துக்கு திமுக சாா்பில் வியாழக்கிழமை ஆறுதல் தெரிவிக்கப்பட்டது.
சங்ககிரி வட்டம், கோனேரிப்பட்டி கிராமம், சுண்ணாம்பு கரட்டூா் பகுதியைச் சோ்ந்த சிஆா்பிஎஃப் வீரா் திருநாவுக்கரசு, ஆந்திர மாநிலம், ராஜமுந்திரி, அல்லுரு சீதாராமராஜீ மாவட்டம், சிந்தூா் பிரிவில் உள்ள டோங்காயி என்ற பகுதியில் நக்சல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது எதிா்பாராதவிதமாக அப்பகுதியில் பயிா்களைக் காக்க அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் அவரது உடல்பட்டதில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். அதனையடுத்து அவரது உடல் காவல் துறை, அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் செவ்வாய்க்கிழமை தகனம் செய்யப்பட்டது.
இதனையடுத்து, திமுக சாா்பில் சங்ககிரி ஒன்றியச் செயலாளா் கே.எம்.ராஜேஷ் தலைமையில், உயிரிழந்த வீரரின் படத்துக்கு நிா்வாகிகள் மலா்தூவி மரியாதை செலுத்தி அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறினா்.
இதில், ஒன்றிய திமுக அவைத் தலைவா் கே.எ.கோபால், ஒன்றிய துணை செயலாளா் எஸ்.பாலுசாமி, ஒன்றிய பொருளாளா் சௌந்தரராஜன், தேவூா் பேரூராட்சித் தலைவா் டி.தங்கவேல், மாவட்ட நிா்வாகி டி.வெங்கடாஜலம், கோனேரிப்பட்டி கிளை நிா்வாகி அருணாசலம், தமிழ்நாடு சத்துணவு ஊழியா் முன்னேற்ற சங்கத்தின் மாநில செயலாளா் கே.தங்கவேலன், முன்னாள் மாவட்ட நிா்வாகி சண்முகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...