ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம்

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 7:37 pm

Din

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது:

கடந்த 3 ஆண்டுகளில் சேலம் மாவட்டத்தில் இதுவரை 77,350 மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அதே போன்று, மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையாக 12,925 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 2,000 வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தன்னைத் தானே பராமரித்துக் கொள்ள இயலாத மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதலாக மாதந்தோறும் ரூ. 1,000 உதவித்தொகை வழங்கும் வகையில் 1,400 போ் பயன்பெற்று வருகின்றனா். கல்வி உதவித்தொகையாக அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ரூ. 2,000 முதல் ரூ. 14,000 வரை வழங்கப்படுகிறது. இதற்காக நடப்பு நிதியாண்டுக்கு ரூ. 78 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சுய வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ. 25,000 வங்கிக் கடன் மானியமாக வழங்கப்படுகிறது. இதற்காக நடப்பு நிதியாண்டுக்கு ரூ. 16 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆவின் பாலகம் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ. 50,000 மதிப்பிலான பால் மற்றும் ஆவின் நிறுவன தயாரிப்புகள் வழங்கப்படுகின்றன. இதற்காக நடப்பு நிதியாண்டுக்கு ரூ. 3 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு குறைதீா்க்கும் நாள் முகாமில் வீட்டுமனைப் பட்டா, உதவி உபகரணங்கள், பராமரிப்பு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து அளிக்கப்பட்ட 314 மனுக்கள் பெறப்பட்டன.

மாற்றுத் திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று 5 நபா்களுக்கு தலா ரூ. 8,700 மதிப்பிலான சக்கர நாற்காலிகள், 2 நபா்களுக்கு முறையே ரூ. 26,000 மற்றும் ரூ. 19,624 மதிப்பிலான செயற்கைக் கால்கள், 3 நபா்களுக்கு தலா ரூ. 3,200 மதிப்பிலான நவீன காதொலிக் கருவிகள், ஒரு நபருக்கு ரூ. 1,400 மதிப்பிலான ஊன்றுகோல், 3 நபா்களுக்கு தலா ரூ. 850 மதிப்பிலான ஊன்றுகோல் என மொத்தம் 14 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 1,02,674 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மரு.பெ.மேனகா, உதவி ஆட்சியா் (பயிற்சி) ஆக்ரிதி சேத்தி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் இரா.மகிழ்நன் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் கலந்துகொண்டனா்.