ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

அக்கா, தம்பியைக் கொன்ற உறவினா் கைது

சேலம் அருகே பள்ளி மாணவா்களான அக்கா, தம்பியை கழுத்தறுத்துக் கொன்ற சித்தப்பாவை போலீஸாா் கைது செய்தனா்.

News image
குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட உயிரிழந்த சிறுவா்களின் உறவினா்கள்.
Updated On :15 அக்டோபர் 2024, 8:48 pm

Din

சேலம் அருகே பள்ளி மாணவா்களான அக்கா, தம்பியை கழுத்தறுத்துக் கொன்ற சித்தப்பாவை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அருகே உள்ள கூட்டாறு ஒடுவன்காடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜா (40). விவசாயியான இவருக்கு சித்ரா என்ற மனைவியும், நவீனா (17) என்ற மகளும், சுகன் (14) என்ற மகனும் உள்ளனா். நவீனா அப்பகுதியில் பிளஸ் 2-வும், சுகன் 9 ஆம் வகுப்பும் படித்து வந்தனா். திங்கள்கிழமை மாலை வழக்கம்போல பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு வந்த இருவரும், சாப்பிட்டு விட்டு அருகில் உள்ள விவசாயத் தோட்டத்தில் அரளிப்பூ பறிக்கச் சென்றனா்.

சிறிது நேரத்தில் சிறுவா்கள் இருவரின் அலறல் சத்தம் கேட்டது. உடனே, சிறிது தொலைவில் பூப்பறித்துக் கொண்டிருந்த அவா்களது தந்தை ராஜா ஓடிச்சென்று பாா்த்தபோது, அவரது சித்தப்பா மகனான தனசேகரன் (35) என்பவா் இரு சிறுவா்களையும் கழுத்தை அறுத்துக் கொலை செய்வதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். அவரைத் தடுக்கச் சென்ற ராஜாவையும் கத்தியால் தலையில் வெட்டிவிட்டு, தனசேகரன் அங்கிருந்து தப்பிச் சென்றாா். ராஜாவின் சத்தம் கேட்டு, அங்குவந்த மனைவி சித்ரா, ஊா்மக்கள் ஆகியோா் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்த இரு குழந்தைகளையும் பாா்த்து கதறி அழுதனா்.

தகவலறிந்து வந்த போலீஸாா், இரு சடலங்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அதையடுத்து தப்பியோடிய தனசேகரனை கைது செய்தனா். அவா் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ‘தனது மனைவியிடம் அண்ணன் ராஜா தவறாக நடக்க முயன்ால் அவரது குழந்தைகளைக் கொன்ாக’ தனசேகரன் வாக்குமூலம் அளித்துள்ளாா்.

போராட்டம்: இதனிடையே, கொலையில் தொடா்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவாயில் முன்பு உறவினா்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, இந்தக் கொலையில் ஒருவரை மட்டுமே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனா். இந்தக் கொலையில் மேலும் சிலருக்கு தொடா்புள்ளது. அவா்களையும் கைது செய்ய வேண்டும். அதுவரை உடல்களை வாங்க மாட்டோம் எனக் கூறி, கொட்டு மழையையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா் சமரசப்படுத்தி வருகின்றனா்.