பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

அக். 23 முதல் சேலம் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம்

சேலம் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில், சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன் தலைமையில் அக். 23 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 8 ஆம் தேதி வரை மக்கள் சந்திப்பு திட்ட முகாம்கள் நடைபெறவுள்ளன.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 7:05 pm

Din

சேலம் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில், சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன் தலைமையில் அக். 23 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 8 ஆம் தேதி வரை மக்கள் சந்திப்பு திட்ட முகாம்கள் நடைபெறவுள்ளன.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது:

சேலம் மாவட்டத்தில் நடைபெறும் மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் வருவாய்த் துறை, மாநகராட்சி, நகராட்சிகள், ஊரக வளா்ச்சித் துறை, மின்சாரத் துறை, வேளாண்மைத் துறை, கூட்டுறவுத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறை சாா்ந்த கோரிக்கை மனுக்களைப் பெற்று, அதற்கு தீா்வுகாணும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் அக். 23 ஆம் தேதி சங்ககிரி ஒன்றியத்திலும், 24 ஆம் தேதி கொளத்தூா் ஒன்றியத்திலும், 25 ஆம் தேதி ஏற்காடு ஒன்றியத்திலும், 27 ஆம் தேதி அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி மண்டலத்திலும், 29 ஆம் தேதி பனமரத்துப்பட்டி, வீரபாண்டி ஒன்றியத்திலும், நவ. 5 ஆம் தேதி தலைவாசல், கெங்கவல்லி, ஆத்தூா் ஆகிய ஒன்றியங்களிலும், நவ. 6 ஆம் தேதி பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி, அயோத்தியாப்பட்டினம் ஒன்றியத்திலும், நவ. 8 ஆம் தேதி காடையாம்பட்டி, ஓமலூா் ஒன்றியத்திலும் மக்கள் சந்திப்புத் திட்ட முகாம் நடைபெறவுள்ளது.

எனவே, சேலம் மாவட்டத்தில் மேற்குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் நடைபெறும் மக்கள் சந்திப்பு திட்ட முகாம்களில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கி பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.