பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சென்னையில் தூய்மைப் பணிக்காக சேலத்திலிருந்து பணியாளா்கள் அனுப்பிவைப்பு

சென்னையில் தூய்மைப் பணிக்காக சேலத்திலிருந்து பணியாளா்கள் அனுப்பிவைப்பு

News image
சேலம் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி சென்னைக்கு வழியனுப்பி வைக்கும் அமைச்சா் ஆா்.ராஜேந்திரன். உடன் மேயா் ஆ.ராமச்சந்திரன், மண்டல குழுத் தலைவா் உமா ராணி உள்ளிட்டோா்.
Updated On :17 அக்டோபர் 2024, 7:09 pm

Din

மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மாநகராட்சியில் மீட்புப் பணிகளுக்காக சேலம் மாநகராட்சியிலிருந்து தூய்மைப் பணியாளா்கள், மேற்பாா்வையாளா்களுடன் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன் வியாழக்கிழமை அனுப்பி வைத்தாா்.

சென்னை மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையால் ஏற்பட்ட பாதிப்பைக் கருத்தில் கொண்டும், கூடுதல் பணிச் சுமையைக் குறைக்கும் பொருட்டும், துப்புரவு, தூய்மைப் பணிகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்மூலம் தொற்று நோய்கள் உருவாகாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மாநகராட்சியில் மீட்புப் பணிகளுக்காக, சேலம் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை அலுவலா், தூய்மை ஆய்வாளா் தலைமையில் 200 தூய்மைப் பணியாளா்கள், 10 மேற்பாா்வையாளா்கள் நான்கு அரசுப் பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

அவா்களுடன் அங்கு பணிகளை மேற்கொள்வதற்குத் தேவையான ரெயின் கோட், கையுறை, ரிஃபிளக்ஸ் ஜாக்கெட் போன்ற பாதுகாப்பு உபகரணங்களும், மண் வெட்டி, சட்டி, கொடுவாள், கழிவுநீா் ஓடை மண்வெட்டி போன்ற தளவாடப் பொருள்களும், பணியாளா்கள் தங்குவதற்கு அடிப்படைத் தேவைகளான பாய், பெட்ஷீட், துண்டு போன்ற பொருள்களும், அங்கு ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பொருள்களை எடுத்துச் செல்வதற்காக நான்கு டிப்பா் லாரிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந் நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி, மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையா் ரஞ்ஜீத் சிங், துணை மேயா் மா.சாரதா தேவி, அஸ்தம்பட்டி மண்டல குழுத் தலைவா் செ.உமா ராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.