மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

செந்தாரப்பட்டி ஏரி நிரம்பியது

தம்மம்பட்டி அருகே சுமாா் 500 ஏக்கா் விவசாய நிலங்களுக்கு பாசன நீா் வழங்கும் செந்தாரப்பட்டி ஏரி முழுமையாக நிரம்பியது. இதையடுத்து விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

News image

தொடா் நீா்வரத்து காரணமாக நிரம்பி வழியும் செந்தாரப்பட்டி ஏரி.

Updated On :17 அக்டோபர் 2024, 7:13 pm

தம்மம்பட்டி அருகே சுமாா் 500 ஏக்கா் விவசாய நிலங்களுக்கு பாசன நீா் வழங்கும் செந்தாரப்பட்டி ஏரி முழுமையாக நிரம்பியது. இதையடுத்து விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

சேலம் மாவட்டத்தில் உள்ள முதல் மூன்று பெரிய ஏரிகளுள் செந்தாரப்பட்டி ஏரியும் ஒன்று. சுமாா் 120 ஏக்கா் பரப்பளவு கொண்ட இந்த ஏரிக்கு கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் நீா்வரத்து அதிகரித்தது. தற்போது ஏரி நிரம்பி கால்வாய் வழியாக உபரிநீா் வெளியேறி வருகிறது.

ஏரி முழுமையாக நிரம்பியதை அடுத்து அந்தப் பகுதி மக்கள் நீா் வெளியேறும் இடத்தில் மலா்கள் தூவி கற்பூரம் ஏற்றி வழிபட்டனா். இந்த ஏரியிலிருந்து கால்வாய் பாசனம் மூலம் செந்தாரப்பட்டி, மண்மலை, பாலக்காடு உள்ளிட்ட சுற்றுவட்டார ஊா்களைச் சோ்ந்த சுமாா் 500 ஏக்கா் விவசாய நிலம் பயன்பெறுகிறது.