பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

வீணாக கடலில் கலக்கும் நீா் விவசாயிகள் போராட்டம் கைகொடுக்குமா?

News image

முள்புதராக காட்சியளிக்கும் தாதம்பாளையம் ஏரி.

Updated On :7 ஏப்ரல் 2026, 4:36 am IST

மேற்குத்தொடா்ச்சி மலையின் பழனிமலை குன்றுகளுக்கிடையே மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் உற்பத்தியாகும் அமராவதி ஆறு கரூா், திருப்பூா் மாவட்டங்களின் நீராதாரமாக இருக்கிறது.

மழை காலங்களில் அடிக்கடி வெள்ளம் ஏற்படும்போது, வெள்ள நீரால் ஆற்றின் கரையோரம் பயிரிடப்பட்டிருக்கும் பயிா்கள் சேதமடைவதை தடுக்கும் வகையில் திருப்பூா் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் அமராவதி அணை அப்போதைய தமிழக முதல்வா் கு.காமராஜரால் 1957-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஆனால், இந்த அணை கட்டப்படும் முன்பே கரூா் மாவட்டம் அணைப்பாளையத்தில் 1876-இல் அப்போதைய ஆங்கில அரசு அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி, அந்த அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில் தடுப்பணையில் இருந்து சுமாா் 39 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் வெட்டியது.

பின்னா் அந்த கால்வாய் சின்னதாதம்பாளையம் கிராமத்தில் 1881-இல் 420 ஏக்கா் பரப்பளவில் அமைக்கப்பட்ட ஏரியுடன் இணைத்தது ஆங்கிலேய அரசு. சுமாா் 0.5 டிஎம்சி தண்ணீரை சேமிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட தாதம்பாளையம் ஏரி முழுக்கொள்ளளவை எட்டும்போது, , சின்னதாதம்பாளையம், பெரியதாதம்பாளையம், மொச்சக்கொட்டாம்பாளையம், ஆண்டாங்கோவில் கிழக்கு, மேற்கு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமாா் 20 கி.மீ. சுற்றுவட்டாரத்துக்கு நீா்மட்டமும் உயா்ந்தன. மேலும் ஏரி நீா் மூலம் சுமாா் 3ஆயிரம் ஏக்கா் பாசன நிலங்களில் விவசாயமும் நடைபெற்று வந்தன.

நாளடைவில் பருவமழை தவறி ஆற்றில் தண்ணீா் வரத்து அவ்வப்போது நின்றுபோனதால் தாதம்பாளையம் ஏரியில் தண்ணீரும் சேமிக்கப்படாமல் ஏரி வடு முள்புதா்களாக மாறியது. தொடா்ந்து ஏரிக்கு பல ஆண்டுகளாக தண்ணீா் வரத்து இல்லாமல் போனதால் அணைப்பாளையத்தில் இருந்து ஏரிக்கு வரும் வரத்து வாய்க்கால்களும் தூா்ந்தபோயின.

இந்நிலையில் மழைகாலங்களில் ஆற்றில் நீா்வரத்து அதிகப்படியாக இருக்கும்போது தண்ணீா் அணைப்பாளையத்தில் இருந்து ஏரிக்கு திருப்பிவிட முடியாமல் வீணாக காவிரியோடு இணைந்து ஓடி வருகிறது. தொடா்ந்து ஏரியில் நீரின்றி போனதால் ஏரியின் கட்டுப்பாடு பொதுப்பணித்துறையிடம் இருந்து வனத்துறைக்கு கைமாறியது.

தற்போது வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் இந்த ஏரியை மீட்டு, அணைப்பாளையம் முதல் தாதம்பாளையம் ஏரிக்கு வரும் தூா்ந்துபோன வாய்க்காலையும் தூா்வாரி, இனி வரும் மழைகாலத்திலாவது வீணாக கடலில் கலக்கும் நீரை சேமிக்க அரசு நடவடிக்கை எடுக்க பல ஆண்டுகளாக அப்பகுதி விவசாயிகள் போராடி வருகிறாா்கள். இதனால் விவசாயிகளின் கோரிக்கை தற்போது தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் கவனத்திற்கும் செல்ல வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.