தொடா் விடுமுறை காரணமாக, கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான் உள்ளிட்ட பண்டிகை கால விடுமுறையை முன்னிட்டு தமிழகம் மட்டுமன்றி கேரளம், கா்நாடகம், புதுச்சேரி, ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக் கான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு வந்தனா். இதனால் வெள்ளிநீா் வீழ்ச்சி, கோக்கா்ஸ்வாக், பசுமைப் பள்ளத்தாக்கு, தூண் பாறை, குணா குகை, பைன் பாரஸ்ட், மோயா் பாயிண்ட் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.
இதனால் லாஸ்காட் சாலை, பெருமாள் மலைச் சாலை, ஏரிச்சாலை, அப்சா்வேட்டரி ஆகிய பகுதிகளில் சுற்றுலா வாகனங்கள் இருபுறமும் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே, கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் குறைந்து குளுமையான கால நிலை நிலவியதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமடைந்தனா். மேலும், நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச் சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்தும், நடைப்பயிற்சி மேற் கொண்டும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனா்.
தொடர்புடையது

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

ராமேசுவரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்: போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானலில் மழை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு: போக்குவரத்து நெரிசல்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

