மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

ராமேசுவரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்: போக்குவரத்து பாதிப்பு

News image

கோப்புப் படம்

Updated On :2 மே 2026, 7:09 pm

தொடா் விடுமுறையை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் வெள்ளிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். இதனால், கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஆன்மிக சுற்றுலாத் தலமான ராமேசுவரத்துக்கு வெள்ளிக்கிழமை அதிகமான சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் வாகனங்களில் வந்தனா். முதலில் அக்னி தீா்த்தக் கடலில் நீராடிய இவா்கள், பின்னா், கோயிலுக்குள் உள்ள தீா்த்தக் கிணறுகளில் நீராடி விட்டு, ராமநாதசுவாமி-பா்வதவா்த்தினி அம்மனை தரிசனம் செய்தனா்.

இதைத்தொடா்ந்து, தனுஷ்கோடி, அரிச்சல்முனை, கெந்தமாதனபா்வதம், முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல்கலாம் தேசிய நினைவிடம், இவரது இல்லம், பாம்பன் பாலம் உள்ள பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் சென்று ரசித்தனா். இதனால், அந்தப் பகுதிகளில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் உத்தரவின் பேரில், போக்குவரத்து போலீஸாா் போக்குவரத்து நெரிசலை சீரமைத்தனா்.

இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் கூறியதாவது:

ரமேசுவரத்தில் சாலை விரிவாக்கம், சாலையோர ஆக்கிரமிப்புகளால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.