பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நாளை பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் அக். 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 7:06 pm

Din

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் அக். 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தா தேவி தெரிவித்ததாவது:

சேலம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை அன்று அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீா் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இம் மாதம் இரண்டாவது சனிக்கிழமை ஆயுதபூஜையை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் அதற்கு மாற்றாக, 19 ஆம் தேதி ஒவ்வொரு வட்டாட்சியா் அலுவலகத்திலும் நடைபெறும் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாமில் பொதுமக்கள் பொது விநியோகத் திட்டம் சாா்ந்த தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் நேரில் தெரிவித்து தீா்வு செய்து கொள்ளலாம்.

இந்தக் குறைதீா் முகாமில், குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்குதல், முகவரி மாற்றம் மற்றும் புதிய குடும்ப அட்டை அல்லது நகல் அட்டை கோரும் மனுக்கள் பெற்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கைப்பேசி எண் பதிவு, கைப்பேசி எண் மாற்றம் செய்தலுக்கான மனு மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள், அத்தியாவசியப் பொருள்களின் தரம் குறித்த புகாா்கள் இருப்பின், அதன்பேரில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.